உனில் உயிர்பூத்து நின்றேன் அமேசான் லிங்க்

உனில் உயிர்பூத்து நின்றேன் அமேசான் லிங்க்

ஹாய் டியர்ஸ் இதோ நேரடிக்கதையோடு வந்துட்டேன்.

"உனில் உயிர்பூத்து நின்றேன்"

யாமக்கள்வனில் வரும் மாரிக்கு தனிக்கதையாவே எழுதிட்டேன்.படிச்சுட்டு உங்க ஸ்டார்ஸ்ஸை அங்கப்போட்டு வீடுங்க டியர்ஸ்...

************

டீசர்

அதனால் இரயில் அருகில் வரும்போது பயத்தில் வெடவெடத்தவாறே சாவை நோக்கிக் காத்திருந்தவளை யாரோ பிடித்து இழுத்துத் தள்ளவும் பயந்து அப்படியே மாரியையும் பிடித்து இரயிலுக்குள் தள்ளப்பார்த்தாள். அது முடியாதுபோக அவனது சட்டைக் கிழிந்ததோடு இருவரும் உருண்டு விழுந்திருந்தனர்.

செவ்வந்திக்கு பயத்திலும் நடுக்கத்திலும் மூச்சு வாங்கியது. கண்ணை மூடிக்கொண்டிருந்தவள் நம்மை இழுத்து சாகவிடாமல் பண்ணின அந்த பரதேசி யாரு? என்று கண்ணைத்திறந்துப் பார்த்தாள்.

மாரியின் முகம் மிக அருகில் தெரிந்தது.அதுவும் அவனது கண்கள் கோபத்தில் சிவந்து அப்படியே அவளை கடிச்சிடுமளவுக்குப் பார்த்திருந்ததை கவனித்தாள்.

தனது நாக்கு வறண்டு இருக்க கொஞ்சம் நிதானித்து எச்சில் முழுங்கியவள்”எதுக்கு என்னை சாகவிடாமல் வந்து பிடிச்சு இழுத்த? நீ என்ன பொண்ணுங்களை மட்டும் காப்பாத்த வர்ற சினிமா ஹீரோவா?கொஞ்சங்கூட யோசிக்கறதில்லையா? ஒருத்தி அவ விருப்பட்டு சாகப்போறாளே நிம்மதியா சாகவிடுவோம்னு இல்லாமல் இப்படி வந்து தொந்தரவுச் செய்யுறியே அறிவில்லை”என்றவவாறே எழுந்திருக்க முயன்றாள்.

அப்போதுதான் பார்த்தாள் அவன் அவளை இறுக்கிப்பிடித்திருக்க அவன்மேலயே படுத்திருந்தாள்.

அய்யே ச்சை என்று வேகமாக அவனது கையைத் தள்ளிவிட்டு கீழே இறங்கமுயன்றாள்.

அவளால் முடியாது போனது,உடனே மாரியின் முகத்தைப் பார்த்தவள்”கையை எடு. நான்தான் வர்றேன்னு எப்படி கண்டுப்பிடிச்சு பின்னாடியே வந்த? ஒரு பொம்பள புள்ள வீட்டை விட்டு வெளியே இறங்கிட கூடாதே பின்னாடியே மோப்பம் பிடிச்சு வந்திடுவியா?”

என்று தனது நோக்கம் நிறைவேறாமால் காப்பாத்திட்டானே என்ற ஆதங்கத்தில் மரியாதை இல்லாமலே பேசிக்கொண்டிருந்தாள்.

அவ்வளவுதான் அடுத்த நொடி சப்பென்று அவளது கன்னத்தில் அறைந்திருந்தான். ஏற்கனவே அப்பா இறந்தத் துக்கத்திலும் வேதனையிலும் சாப்பிடாமல் மனமும் உடலும் சொர்ந்திருந்தவள் வழக்கம்போல அவன் அடித்ததும் மயங்கிவிட்டாள்.

இது ஒரு நோஞ்சான் போல! எப்போபாரு அடிச்ச உடனே மயங்கிடுது. என்னத்த ஊரு நாட்டுக்காரியோ? அப்படியே தூக்கி ரயில்வே கேட் கடந்துரயில்வே ஸ்டேஷன் பென்ச்சில் படுக்க வைத்தவன் அங்கிருந்து தண்ணீரை முகத்தில் மொத்தமாக ஊற்றினான்.

அதில் அடித்துப்பிடித்து எழுந்தவள் நான் எங்க இருக்கேன்?செத்துட்டனா?

“இன்னும் சாகலை.நானே உன்னை சாகடிச்சிடலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்” என்று மாரி கத்தியதும் படீரென்று எழுந்து அமர்ந்தாம்.எங்கிருக்கிறோம் சுற்றி சுற்றிப் பார்த்துவிட்டு அன்றைக்கு வந்த அதே இரயில்வே ஸ்டேஷன் என்றதும் மெதுவாகக் காலை ஊன்றி நின்றாள்.

அவள் மறுபடியும் ஏதாவது கோக்குமாக்காக செய்துவைப்பாள் என்று அவளது முழியே சொன்னது.

“என்ன மறுபடியும் எந்த ட்ரெயின்ல விழலாமன்னு யோசிக்கிறியே லூசே? உனக்குக் கொஞ்சமாவது அயிவுஇருக்கா? உங்க வீட்டுல உங்கப்பா செத்துப்போய் பாடி அங்கக் கிடக்கு. நீயும் செத்துப்போறேன்னு இங்க வந்திருக்க. நீயும் செத்துட்டா பாவம்ல அவங்க இரண்டுபேரு பாடியை வைச்சிட்டு என்ன பண்ணுவாங்க. அதைவிட நீ எதுக்கு அடிக்கடி சாக முயற்சிக்கிற.குடும்பத்துல இருக்கிறங்களைப் பத்தி ஒரு நோடிக்கூட யோசிக்காத உன்னை உங்கம்மா பொறந்ததும் கொன்றிருந்தால் அவங்களுக்கு இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.இதுல சாகப்போறேன்னு வாரத்துக்க் இரண்டுமுறை இப்படி லூசுத்தனம் பண்ணிடுற.வா நானே உன்னை அடுத்த ட்ரெயின்ல தள்ளிவிடுறேன்” என்று அவளது கையைப்பிடித்து இழுத்துச்சென்றான்.

அதில் கோபம் வந்து”டேய் கையைவிடுடா நீ உங்க வீட்டுக்கும் இந்த ஏரியாவுக்கும் பெரிய ஆளாக இருந்தால் என்யவேணும்னாலும் செய்வியா? இப்படி என் கையைப்பிடித்து இழுத்துட்டுப்போற.ட்ரெயின்ல விழப்போன என்னை அடித்துத் தூக்கிட்டு வந்திருக்க! மயக்கம்போட்டு விழுந்த என்னை என்னடா பண்ண போன?”என்று அவள் செய்ததையும் தற்கொலை முயற்சியையும் மறைத்து அவன்மீதுதான் தப்பு என்கின்றதுபோன்று பேசினாள்.

அவள் பேசுவதையே பார்த்திருந்தவன் லேசாக சிரித்தான்.அவனது சிரிப்பின் அர்த்தம் புரிந்தவள்”எதுக்கு சிரிக்கிற?”எனக்கேட்டவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவனைப் பார்க்காது நின்றிருந்தாள்.

“உன்னையமாதிரி பிராட நான் இதுவரைக்கும் பார்த்ததேயில்லை” அதுதான் சிரித்தேன்.

*******(***

Uk link

https://www.amazon.co.uk/dp/B0D1336GRV

US link

https://www.amazon.com/dp/B0D1336GRV

India link

https://www.amazon.in/dp/B0D1336GRV